தமிழ் சினிமாவில் தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி. நாங்கள் பி ரிகிறோம் என்று வருட ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளனர். பின் தனுஷ் நானே வருவேன் படப்பிடிப்பில் பிஸியாக ஐஸ்வர்யா தனி குழுவுடன் இயக்கும் இசை ஆல்பத்தில் பிஸியாக வேலை செய்து வருகிறார்.
மேலும் அண்மையில் ஐஸ்வர்யா தனது ஆல்பம் உருவாக்கும் குழுவுடன் இருக்கும் புகைப்படம் வர நேற்று தனுஷ் தனது மகன் யாத்ராவுடன் இருக்கும் போட்டோ வெளியாகி இருந்தது. ஐஸ்வர்யா ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவரிடம் காதல் குறித்து கேள்வி கேட்டுள்ளனர். ஐஸ்வர்யா அதற்கு காதல் ஒரு பொதுவான உணர்வு ஒரு ஆளுக்கும் அவரின் தனிப்பட்ட விஷயத்துக்கும் தொடர்பில்லை. நான் என் தந்தையை நேசிக்கிறேன். என் அம்மாவை நேசிக்கிறேன், நான் என் குழந்தைகளை நேசிக்கிறேன். அன்பை ஒரு தனிமையில் கட்டுப்படுத்தக் கூடாது என்று நான் நினைக்கிறேன். நான் காதலிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.