விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மருமகளாக ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ். அவர் இதற்கு முன் சன் டிவி சுமங்கலி சீரியலில் அனு கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி ஜெனி கதாபாத்திரம் தான் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
மேலும் இந்த சீரியலில் அவர் பாக்கியாவிற்கு ஆதரவாக இருப்பதால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். பாக்கியாவின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக ஜெனி தான் இருக்கிறார் இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா கணேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார்.
ரசிகர் ஒருவர் உங்களுக்கு சமைக்க தெரியுமா என கேட்டதற்கு ஒரு அளவிற்கு சமைக்க தெரியும் என பதில் அளித்து இருக்கிறார். அப்போ குக் வித் கோ மாளி நிகழ்ச்சிக்கு போவீங்களா என கேட்டதற்கு அந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி கூப்பிட்டால் போவேன் என பதில் அளித்து இருக்கிறார்.
மேலும் குக் வித் கோ மாளி சீசன் 3ல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக போவீங்களா என கேட்டதற்கு ஆமாம் இல்லை என பதில் கொ டுக்காமல் தலையை ஆட்டுவது போல பதில் அளித்துள்ளார்.
அதனால் அவர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வர வாய்ப்புள்ளது. என குக் வித் கோ மாளி சீசன் 3 முதல் இரண்டு சீசன்களை போலவே வெற்றி அடையும் என்பதில் சந்தேகமே இல்லை என கடந்த வாரங்களில் ஒளிபரப்பான எபிசோடுகள் மூலம் உறுதியாக தெரிகிறது.