நடிகை குஷ்பூ கடந்த ஆண்டு வெளிவந்த அண்ணாத்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இதனை தொடர்ந்து சின்னத்திரையில் வரும் புதிய சீரியலில் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.
மேலும் இந்நிலையில் இவர் புதிய படம் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளாராம். என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்க வந்துள்ளார் 90ஸ் ரசிகர்களின் மனதை வென்ற நடிகர் மோகன்.
இந்த படத்தில் நடிகர் மோகனுக்கு ஜோடியாக குஷ்பு நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இதற்கு முன் தெலுங்கில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் தான் முதன் முறையாக தமிழில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளார்.