Shadow

கடைசியாக ஒரு வழியா திருமணம் குறித்து அறிவித்த நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ருதி, மாப்பிள்ளை இவர் தான்..!!

சினிமாவை விட தற்போது சின்னத்திரை கலைஞர் எல்லாரும் பிரபலம் ஆகிவிட்டனர் மக்களிடம்,இந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரைப் பிரபலங்கள் பலருக்கு திருமணம் நடைபெற்று வருகிறது. அதிலும் சீரியலில் ரீல் ஜோடிகளாக இருந்தவர்கள் நிஜவாழ்க்கையில் ரியல் ஜோடிகளாக மாறிவிடுகிறார்கள். ஷபானா – ஆர்யன், மதன் – ரேஷ்மா, சித்து- ஸ்ரேயா இவர்களைத் தொடர்ந்து தீபக்- அபிநவ்யா ஆகியோர் திருமணம் செய்து கொண்தார்கள். இந்த வரிசையில் தற்போது ஸ்ருதி சண்முக பிரியன் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

ஸ்ருதி சண்முக பிரியன் 1993 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தவர். இவர் பள்ளிப் பருவம் படித்துக் கொண்டிருக்கும்போதே சீரியலில் நடிக்கும் பல வாய்ப்புகள் வந்தது. இவருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது நாதஸ்வரம் சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார். “மெட்டிஒலி” புகழ் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் தான் நாதஸ்வரம். இந்த தொடரை திருமுருகன் எழுதி இயக்கி நடித்தும் இருந்தார். இந்த தொடரில் பலர் நடித்து இருந்தார்கள். குடும்ப உறவுகளின் கதையை மையமாகக் கொண்டது தான் இந்த தொடர்,எல்லா கதைகளும் அப்படி தானே.

ஒரு தொடர் பிரபலம ஆகிவிட்டால் போதும் உங்களுக்கு வாய்ப்புகள் குவியும். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அந்த தொடருக்குப் பின்னர் சுருதி பொன்னூஞ்சல், கல்யாண பரிசு, வாணி ராணி போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைத்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டு வரும் “பாரதி கண்ணம்மா” தொடரில் கூட சுருதி நடித்து இருந்தார் இதன் மூலம் இன்னும் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் .

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் அப்படி மல்டி டாஸ்கிங் ஒர்க் பண்ணுவது ஸ்ருதிக்கு ரொம்ப பிடித்தமான விஷயம்.வேறு மொழியில் கூட பயிற்சி பெறுகிறார் சீரியலில் நடிக்கும்போது பிரஞ்ச் பாடப்பிரிவில் பி1 படித்துக் கொண்டிருக்கிறார். பிரெஞ்சு மொழியில் b1 முடித்திருந்தாலே கல்லூரியில் பிரஞ்ச் பாடப்பிரிவு விரிவுரையாளராக முடியும். அதுதவிர பிரஞ்ச் தியேட்டர் ஆர்டிஸ்ட் குரூப்பிலும் சுருதி இருந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபலம் அப்படின்னாலே சமூக வலைத்தளங்களில் போட்டோ வீடியோ தான் எப்போமே இவங்க மட்டும் விதிவிலக்கா?

இன்ஸ்டா பக்கங்களில் இவர் அடிக்கடி தனது புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்.அதில் இவர் பகிர்ந்த ஒரு போட்டோ மூலம் இவருக்கு கூடிய விரைவில் திருமணம் ஆகப்போகிறது என்ற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. ஸ்ருதிக்கும், அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த 27ஆம் தேதி பூச்சூடல் விழா நடைபெற்றது. இதுகுறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். தனது ரசிகர்களுக்கு அவர் கூறியிருப்பதை பார்ப்போமா..

பூச்சூடல் விழா என்றால் இந்த பெண்ணை தான் திருமணம் செய்ய போகிறேன் என்று உறுதி செய்வது,இது எங்களுடைய பூச்சூடல் விழா புகைப்படம். சீக்கிரமே நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதிகளை அறிவிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இதை பார்த்து சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ருதி தற்போது குட்டி பிரேக் எடுத்திருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அனைவருக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published.