விஜய் டிவி தொகுத்து வழங்கிய ஷோவான நீயா நானா மூலம் அறிமுகமாகி தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் கோபிநாத் அவர்கள்.நீயா நானா கோபிநாத் என்றால் தெரியாதவர் யாரும் இல்லை. இவர் தமிழ் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் இவர் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி இருக்கிறார்.
மேலும் அப்படியே இவரது பேச்சு திறமையால் மக்கள் மத்தியில் பேசப்பட்டு நீயா நானா மக்கள் கருத்து கூறும் ஷோவை தொகுத்து வழங்க தொடங்கினர். இவருக்கு இந்த நீயா நானா ஷோ மூலம் பல தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் வீ ஜே வாக மட்டுமல்லாமல் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இவர் எழுத்தில் வெளியான புத்தகங்கள் அனைத்தும் மக்களுக்கு பிடித்து இருந்தது.அதில் ப்ளீஸ் இந்த புக்க வாங்கதீங்க, மண்ட பத்திரம், நேர் நேர் தேமா என பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவருக்கு துர்கா என்பவருடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது.
தற்போது மக்கள் அனைவரும் இந்த கொ ரோ ன நோ ய் காரணமாக வீட்டில் இருக்க அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் தங்களது வலைதளங்களில் பெரிதும் தங்களது பொழுதை கழித்து வருகிறார்கள். தங்களுக்கு பிடித்த நடிகர் மற்றும் நடிகைகளின் பழைய அவர்களது புகைப்படங்களை தேடி கண்டுபிடித்து இணையதளத்தில் ப ரப்பி வருகிறார்கள்.
அதே போல் தற்போது கோபிநாத் அவர்களின் திருமண புகைப்படத்தை கண்டு பிடித்துள்ளனர். அதை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இதில் கோபிநாத் அவர்களின் மனைவி துர்கா கோபிநாத் அவர்கள் எந்த ஒரு பொது விழாக்களுக்கும் வருவதில்லை.
மேலும் துர்கா, கோபிநாத் அவர்கள் அசோக் பில்லரில் உள்ள கோபிநாத்தின் ஆபீஸ் பக்கத்தில் ஒரு என்போரியம் வைத்து நடத்தி வருகிறார். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கோபிநாத் தனது மகளுடன் வர அதைப் பார்த்த ரசிகர்கள் நன்றாக வளர்ந்து விட்டாரே அவரது மகள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.